Translate

Tuesday 8 May 2012

ஒலிம்பிக் உடைத்தயாரிப்பில் சிறிலங்கா தொழிலாளர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது ! பிரித்தானிய ஊடகம் அம்பலப்படுத்தியது


ஒலிம்பிக் உடைத்தயாரிப்பில் சிறிலங்கா தொழிலாளர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது ! பிரித்தானிய ஊடகம் அம்பலப்படுத்தியது

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான உடைத் தயாரிப்பில், தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள், சிறிலங்காவில் மீறப்பட்டுள்ள விடயம், பிரித்தானியாவின் independent ஊடகத்தினால் அம்பலத்துக்கு வந்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குரிய பிரத்தியேக உடைகள், சிறிலங்கா உட்பட சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


குறித்த இந்த நாடுகளில் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 8 நிறுவனங்களில், ஒலிம்பிக் சம்மேளத்தினால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போதே, இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்குறித்த நாடுகளில் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில், 175 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்தே, தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

இவ்விடயத்தில் சிறிலங்காவிலேயே தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள் அதிகம் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குரிய நாட்கள் நெருங்கி வரும் நிலையில் , தொழிலாளர்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கபட்டுள்ளது.

ஒலிம்பிக் உடைகள் தாயாரிப்பில், அண்ணளவாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், சராகரி ஒருவர் மாதம் 60 மணித்தியாளங்கள் மேலதிகமாக பணியாற்றக் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

இவற்றுக்கான உரியபத்திரப் பதிவுகள் ஏதுமன்றி, மேலாளரின் பணிப்பிலேயே,  மேலதிகள் நேரம் பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நாளொன்று ஒருவர் 18 மணிநேரம் வரையிலும் பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளதோடு , இவர்களுக்கான கொடுப்பனவாக 12 ஆயிரம் சிறிலங்கா ருபாய்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொழிலார்களுக்கான உரிமைகள் மீறப்பட்டுள்ளதோடு, மனித உரிமை மீறப்பட்டுள்ள ஒலிம்பிக் உடைகள் என குற்றஞ்சாட்டப்படும் அபாயம் உள்ளதென independent ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த இவ்விவகாரம் தொடர்பில் ஒலிம்பிக் சம்மேளனம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment