
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்திய ஆட்சியாளர்களுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, கிளின்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்சினை தொடர்பாக முக்கிய கவனம் செலுத்துமாறு பனர்ஜி இதன்போது கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்துள்ள ஹிலாரி கிளின்டன், இது குறித்து, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் முக்கியமான இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment