Translate

Saturday, 12 May 2012

தமிழரின் ஆண் உறுப்பு வெட்டிக் கொலை


கனடாவில் இருந்து கிளிநொச்சி சென்ற தமிழர் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அனைவரும் சில தினங்களுக்கு முன்னர் படித்திருப்பீர்கள் ! இவர் ஏன் கனடாவில் இருந்து கிளிநொச்சி சென்றார் ? இவரை யார் கொலைசெய்தார்கள் ? இவர் எதற்காக கொலைசெய்யப்பட்டார் என்பது போன்ற விபரங்களை இதுவரை எந்தத் தமிழ் இணையங்களும் வெளியிடவில்லை ! குறிப்பாக சொல்லப்போனால் அதனை வெளியிடவோ இல்லை, இலங்கை அரசை பகைத்துக்கொள்ளவோ அவர்கள் தயார் இல்லை என்பதே யதர்த்த நிலையாகும் ! உண்மையில் நடந்தது என்ன ? இதோ வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்: அதிர்வின் புலனாய்வு நிருபர் தரும் தகவல் ! படியுங்கள் ...


அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் தமிழர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து கிளிநொச்சி சென்றுள்ளார். இவர் ஒரு கனேடியப் பிரஜாவுரிமை பெற்ற தமிழர் ஆவார். இவருக்கு கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில், வணிக ரீதியில் மதிப்பு மிக்க 8 கடைகள் உள்ளனவாம். இவை அனைத்தும் ஒரே நேராக வணிக முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி தற்போதைய நிலையில் பல கோடிகளைத் தாண்டும். அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா இந்த கடைகளை மீளப்பெற இலங்கை சென்றுள்ளார். ஆனால் இக் கடைகளை இலங்கை இராணுவத்தினர் ஏற்கனவே உரிமை கொண்டாடியுள்ளனர். அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா தனது உறுதியைக் காட்டி கடைகள் தனக்கே சொந்தமானவை என நிரூபித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே கொழும்பில் இயங்கிவரும் காகில்ஸ் எனப்படும் பல்பொருள் அங்காடி நிறுவனம் ஒன்றுக்கு இக் கடைகளை இலங்கை இராணுவம் விற்றுவிட்டதாக அதிர்வு இணையம் அறிகிறது.

இதனால் இக்கடைகளை திருப்பிக் கொடுப்பதில் இலங்கை இராணுவத்தினர் கடும்போக்கை கடைப்பிடித்துள்ளனர். மேற்படி அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா இராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் சில உத்தரவுகள் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதனை அடுத்து செவ்வாய்கிழமை(2 தினங்களுக்கு முன்னர்) அவரை கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்து பேசுவார் என்று சொல்லப்பட்டது. இதனை அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமக்கு ஞாயம் கிடைக்கும் எனவும் அவர் நம்பியுள்ளார். இதேவேளை அவர் கொழும்பு புறப்பட தயாராகியிருந்தார். ஆனால் அவரை கிளிநொச்சியில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதனை அறிந்த இவரின், நண்பர்கள் அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜாவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். ஆனால் தான் கோத்தபாயவுடன் கதைக்க இருப்பதால் பிரச்சனை சுமூகமாகத் தீரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க கடந்த வெள்ளிக்கிழமை, இவரை இராணுவத்தின் உயரதிகாரிகள் சிலரும், புலணாய்வுப் பிரிவில் பணியாற்றும் சிலரும் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கி கொலைசெய்துள்ளனர். இக் கொலையைப் பார்த்த 2 தமிழர்களை அவர்கள் மிரட்டியும் உள்ளனர். கொச்சை தமிழில் பேசிய அவர்கள், நடந்த விடையத்தை நீங்கள் வெளியே சொன்னால் உங்களுக்கும் இதே கதிதான் என்று கூறியுள்ளனர். அந்தோணிப்பிள்ளை மகேந்திரராஜா அவர்களின் ஆண் குறியை வெட்டி எறிந்துள்ளனர் புலனாய்வுப் பிரிவினர். அதாவது இப்படியான ஒரு செயலைச் செய்வதன் மூலம், அவர் ஏதோ பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார், இல்லையேல் கள்ளக் காதலியுடன் இருந்ததால் கணவன் அவரைக் கொன்றார், என்பது போன்ற அம்புலிமாமா கதை ஒன்றைச் சொல்ல இலங்கைப் புலனாய்வு முயற்சித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான கொலைகள் நடைபெற்று திசைதிருப்பல்களும் நடைபெற்றுள்ளது. இதனை பாமர மக்கள் நம்பலாம். 

ஆனால் தகவல் தொழில் நுட்ப்பம் வளர்ச்சி கண்டுள்ள இந் நாட்களில் இதனை நம்ப எவரும் தயார் இல்லையே ! குறிப்பாக கொல்லப்பட்ட நபரிடம் பெருந்தொகையான பணமும், அவர் அணிந்திருந்த பெறுமதி மிக்க ஆபரணங்களும் அப்படியே அவர் உடலத்தில் இருக்க, லாப்-டொப் மற்றும் அவரது மோபைல் போனை மட்டும் கொலையாளிகள் எடுத்துச் செல்ல காரணம் என்ன ? இவர் வைத்திருந்த இவர் பணத்துக்காகக் கொலைசெய்யப்படவில்லை என்பது நிரூபனமாகிவிட்டது. அப்படி என்றால் காரணம் தான் என்ன என்று கேட்டால், அங்கே கோத்தபாயவும், காகில்ஸ் உணவு நிறுவனமுமே மிச்சமாக உள்ளது ! இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனியும் காகில்ஸ் உணவு நிறுவனத்தில் தான் பொருட்களை வாங்கப்போகிறார்களா ? வணிக நலன்களுக்காக தமிழர்களைக் கொல்லும் இந் நிறுவனம் கோத்தபாயவுடன் சேர்ந்து எதனையும் செய்யும் அளவு துணிந்துள்ளது. இலங்கை வாழ் தமிழர்கள் இந் நிறுவனத்தை புறக்கணிப்பார்களா ? 

தம்புள்ளையில் இடிக்கப்பட்ட மசூதிக்கு, எதிர்ப்புத் தெரிவித்து உலகில் உள்ள முஸ்லீம் சகோதரர்கள் எல்லாம் ஒன்றாகக் குரல்கொடுக்கும் போது, தமிழர்கள் கொல்லப்படும்போது மட்டும் தமிழர்கள் ஏன் மெளனமாக இருக்கவேண்டும் ? எம்முள் எப்போது ஒற்றுமை வரப்போகிறது. பிற சமூகங்களைப் பார்த்தாவது நாம் திருந்த மாட்டோமா ?


http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2525

No comments:

Post a Comment