கடந்த 6ம் 7ம் திகதிகளில் இத்தாலியின் அனைத்து மாநகரங்களிலும் நடைபெற்ற உள்ளூராட்ச்சித் தேர்தல்களின் பெறுபேறுகள் வெளிவரத்தொடங்கியிருக்கும் இந்நேரத்தில், இதுவரை காலமும் இத்தாலியில் இருந்துவந்த இனத்துவேசத் தன்மை நீங்கியதான ஓர் நல்லதோர் சைகையை கொண்டதாக இம்முறை உள்ளூராட்ச்சித் தேர்தல் நடந்து முடிந்திருகிறது.
குறிப்பாக இ
த்தாலியின் தென் மாகணங்களின் அரசியல் தன்மை வேறு, வட மாகணங்களின் அரசியல் தன்மையென்பது வேறு! உயர் சாதி, வசதி படைத்தவர்கள் எனும் பெருமிதம் கொண்டவர்களான வட மாநில மக்கள் தென் மாநில மக்களை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை, ஒரே நாடு ஒரே மக்களென இருந்தாலும் வேற்றுமை கொண்ட மனப்பாங்கு என்பது புகைக்குள் அடங்கிய நெருப்பாகவே இருந்து வருகின்றமை வருத்தப்பட வேண்டியதே! இந் நிலையில் ஒரு பெரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. இம்முறை நடந்து முடிந்த உள்ளூராட்ச்சித் தேர்தலில் யாழ்/ சாவகச்சேரியைச் சேர்ந்த கந்தையா சின்னத்துரை எனும் ராஜா என்பவர் சின்டக்கோ மார்கோ டோரியாவுடன் இணைந்து வட மாநிலமான ஜெனோவா நகரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்பது வியப்பாகவும்,
அதே வேளையில் மகிழ்ச்சியாவும் உள்ளது. ஜெனோவா வாழ் தமிழர்கள் மட்டுமல்ல, இங்கு வாழக்கூடிய பிறநாட்டவர்களுமே மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. உலகெங்கிலுமுள்ள அனைத்துத் தமிழர்களின் தலையும் நிமிரும் காலமிது, லண்டன், கனடா,பிரான்ஸ் வரிசையில் இத்தாலியும் இணைந்துள்ள இவ்வேளையில், தமிழர்களின் கை இறுகப்பற்றுவதுடன், தேசப்பற்று நிறைந்த ஒரு தேசிய நலன்காக்கும் தாயுள்ளம் பெருகிவர வேண்டும். இத்தேர்தலில் வெற்றிபெற்ற திரு, கந்தையா சின்னத்துரையை தமிழர்களாகிய நாம் வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment