இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியிலுள்ள களுத்துறையில் அமைந்திருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு மசூதியையும் இடித்துத் தகர்ப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பௌத்த பிக்ககளின் தலைமையில் சிங்களவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை களுத்துறையில் நடத்தியுள்ளார்கள்.
இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் களுத்துறைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், பெருமளவுக்கு அமைதியாகவே இடம் பெற்றதாக தெரியவருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். கடந்த மாதத்திலும் இலங்கையின் மத்திய மாகாணமான தம்புளையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனக்கோரி பிக்ககளின் தலைமையில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், குறிப்பிட்ட பள்ளிவபசலையும் சேதப்படுத்தினார்கள்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அசோகா மெனிக்கொட கருத்து வெளியிடுகையில்: "அரசாங்கம் பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும், முஸ்லிம்களின் அழுத்தங்களால் அரசாங்கம் தனது கடமையைத் தவறக்கூடாது எனவும் வலியுறுத்தினார்."

No comments:
Post a Comment