Translate

Saturday, 12 May 2012

தமிழ்மக்களின் சனநாயக உரிமையைப் பறிக்க, கடல்தாண்டியும் நீளும் சிங்களத்தின் கரங்கள்.


By Centre des Tamouls centre.des.tamouls.france@gmail.com

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு என்பது, இந்த நூற்றாண்டில், அரங்கேற்றப்பட்ட மிகக் கொடூரமான இனப்படுகொலை என்பது, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.
பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி தமிழினம் அனுபவித்துவரும் கொடுமைகளை, தெளிவாகப் புரிந்துகொண்டுள்ள சர்வதேச சமூகம், தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்து தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றது.
இந்த நிலையில், புலத்தில், தமிழ் மக்களுக்காகப் போராடும் தமிழர் அமைப்புக்கள் மீது, அவற்றின் செயற்பாடுகள் மீது கடும் கோபத்தில் இருக்கின்ற சிங்களப் பேரினவாத அரசு, அவற்றை முடக்கும் செயற்பாடுகளிலும், அவற்றுக்கு எதிரான பரப்புரைகளிலும், ஈடுபட்டுவருகின்றது.
சிங்களம் தன் கைக்கூலிகளின் துணையுடன், இந்தத் தமிழர் விரோதச் செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. 
தேசிய மாவீரர்நாளை தாயகத்தில், கடைப்பிடிக்கமுடியாதவாறு இராணுவப்பிடிக்குள் மக்களை வைத்து, கொலை அச்சுறுத்தல் விடுத்துவரும் சிங்கள அரசு, மாவீரர் துயிலும் இல்லங்களையே இருந்த இடம்தெரியாமல் அழித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில், பல்லாயிரக்கணக்கில் எம் உறவுகள் அழித்தொழிக்கப்பட்ட கொடுமைகளை தாயகத்தில் யாருமே நினைவுகூர்ந்து, வணக்கநிகழ்வுகளை நடாத்தமுடியாத இராணுவஆட்சி தமிழர் தாயகத்தில் நடக்கின்றது.
இறந்துபோன உறவுகளை நினைத்து, ஒரு துளி கண்ணீர்தன்னும் சொரியமுடியாத உரிமைகள் அற்ற அவலவாழ்க்கையே தாயகத்திலுள்ள தமிழரது.
இந்த நிலையில், புலம்பெயர்ந்த மண்ணில், தமிழர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் இந்நிகழ்வுகளை, தடுப்பதற்காக சிங்கள அரசு இராஜதந்திர வழிகளில் பல முயற்சிகளைச் செய்து தோற்றுப்போயுள்ளது.
மே இனப்படுகொலை நினைவுப் பெருவலியை, நினைவுகூறும் நிகழ்வுகளை புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள் பேருணர்வோடு நடாத்த தி;ட்டமிட்டிருக்கும் இன்றைய நிலையில், அதனைக் குழப்பும் நோக்கோடு, சிங்களத்தின் கூலிகளின் நாசவேலைகள் பிரான்சில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

மே இனப்படுகொலை நினைவுநாளையும், தேசியத் துக்க நாள் நிகழ்வையும், நாடுகடந்த தமிழீழ அரசு, பிரான்ஸ் தமிழர் நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக ஒழுங்கு செய்த நிகழ்வு எதிர்வரும்  பதினேழாம் திகதி, துறோக்கட்ரோ என்ற இடத்தில் நடைபெறஉள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு, அச்சடிக்கப்பட்டு, லாச்சப்பல் பகுதியிலும், பிற புறநகர்ப் பகுதிகளிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், சிங்களக் கைக்கூலிகளால் இரவோடு இரவாக கிழித்தெறியப்பட்டுள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை முடக்கவும், அதன் பிரதமர் உருத்திரகுமார் அவர்களிற்கு நெருக்கடிகளைக் கொடுக்கவும், வுpசமத்தனமான திட்டமிட்ட பரப்புரைகளும், அதனை செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகளையும், சிங்களம் தன் கூலிகளின்துணையுடன் மேற்கொண்டுவருகின்றது.
அதுபோன்று, தமிழ்மக்களின் ஏனைய அமைப்புக்கள் மீதும் சிங்களம் தன்கூலிகளின் துணையுடன் விசமப் பிரச்சாரங்களையும், தமிழ்மக்களின் விடுதலைக்கான செயற்பாடுகளையும் முடக்க முயற்சித்துவருகின்றது.

இவற்றையெல்லாம் முறியடித்து, தமிழ் மக்கள் தமது தேசிய இலக்கை அடைய தெளிவுடனும், அறிவுடனும் விளிப்புடனும் இருந்து செயற்படவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டுப்பெருவலி என்ற நிகழ்வு, எதிர்வரும் பதினேழாம் திகதி, துரோக்கத்ரோ என்ற இடத்தில் பிற்பகல் ஐந்து மணிக்கு நடைபெறும்.
சிங்களம் எத்தனை தடைகளை ஏற்படுத்தினும், தேசியத் தலைவர் காட்டிய வழியில், எமது மக்களின் சுதந்திர வாழ்வுக்கான போராட்டத்தை, அனைத்துத் தமிழரும் இணைந்து மேற்கொள்வோம்.
உண்மையும் நேர்மையும் வெல்லும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்
PR_CTF12_05.jpg

No comments:

Post a Comment