சிங்கள இன வெறியர்களால் தமிழர்களையும் தமிழர் கலாச்சாரங்களையும் சீரழிக்கும் திட்டங்களை தமிழர்களை வைத்தே நிறைவேற்றி வருகிறது பெருந்தொகை பணச்செலவில் திட்டமிட்டு செயற்படுத்தபடும் இந்த இனச் சீரழிப்பு நடவடிக்கைகளுக்கு , ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பச்சோந்தி அமைச்சர்களும் துணையாக உள்ளது அனைவரும் அறிந்த விடையம்.
இந்த ஆரசியல் வாதிகளுக்கு துனையாக் புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து சுற்றுலா செல்லும் தமிழர்கள் சிலருக்கு (விலைமாதுக்களை) தமிழ் சிங்கள விபச்சாரப் பெண்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்த அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபச்சார நடவடிக்கைகளுக்காக போரில் பாதிக்கப்பட்ட, பெற்றோரை இழந்த, உறவினர்களை இழந்த, ஆதரவற்ற வயது குறைந்த பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு, அடைக்கலம் வழங்குவதாக உறுதியளித்து அவர்களை தங்களுடன் அழைத்துச் சென்று பராமரிக்கின்றனர். சிறிது காலம் கழித்து அவர்களை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் அப்படி நடந்த சம்பவங்களில் ஒன்றுதான் அண்மையில் கனடாவில் இருந்து சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட வேலை வவுனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்.
வெளியில் தெரிந்த சம்பவம் இது ஒன்றுதான் வெளியில் தெரியாமல் நடக்கும் சம்பவங்கள் ஏராளம் புலம்பெயர் தேசத்தில் இருந்து ஸ்ரீலங்கா செல்லும் நபர்கள் இப்படியான செயற்பாடுகளில் ஈட்டுபடுவது கண்டறியப்பட்டுள்ளது வயது குறைந்த பெண் பிள்ளைகளுடன் தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டதை அவர்களின் வாய்களால் இங்கு வந்தவுடன் ஒத்துக்கொள்கின்றனர், ஸ்ரீலங்கா சென்று விலை மாதுக்களுடன் குதூகலிக்க வேண்டும் என்று அவாவில் மீண்டும் மீண்டும் அங்கு சென்று வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கடந்த வருடம் வட மாகாணத்தில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களில் யாழ்.மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, வவுனியா மாவட்டம் முதல் நிலை வகிக்கின்றது என இந்தப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 201 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான 66 பாலியல் துஷ்பிரயோகங்கள், 12 உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், 01 மனரீதியான துஷ்பிரயோகங்கள், 05 தற்கொலை முயற்சிகள், 01 தற்கொலை சம்பவம், 16 உதாசீனம், 25 சட்டத்துடன் முரண்பட்ட சம்பவங்கள், 13 தனித்து விடப்பட்ட சம்பவங்கள், 01 சிறுவர் விற்பனை, 02 கடத்தல், 14 இளவயதுத் திருமணம் உட்பட 155 வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தில் நடைபெற்றுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களில் 3,4,5 ஆம் இடங்களை முறையே முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்கள் பெற்றுள்ளன. அத்துடன், வடமாகாணத்தில் 2,097 பெற்றோரை இழந்த சிறுவர்களும், பொற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 10,404 சிறுவர்களும் உள்ளனர் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட 41 சிறுவர் இல்லங்களும், 29 பதிவுசெய்யப்படாத இல்லங்களும் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளதுடன், இவற்றில் 18 சிறுவர் இல்லங்களே அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றன.
19 இல்லங்கள் சீரமைக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. அத்துடன், 31 சிறுவர் இல்லங்கள் மூடுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
http://untamil.com/
No comments:
Post a Comment