Translate

Saturday 12 May 2012

ஆணைக்குழு முன் சாட்சியமளித்ததற்காக புலனாய்வுப் பிரிவினர் என்னை விசாரித்தனர்; மன்னார் ஆயர்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தான் சாட்சியமளித்தது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தன்னிடம் விசாரணை நடத்தியதாக மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் காணாமற் போயுள்ளமை தொடர்பாக நான் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளேன்.


இது தொடர்பாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணைகள் மேற்கொண்டனர்.
முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார் , வவுனியா மாவட்டங்களில் நிரந்தரமாகக் குடியிருந்தோர் மற்றும் வன்முறைகள் யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து குடியிருந்தோர் எண்ணிக்கையை 2008 அக்டோபர் நிலவரத்தின் படி மேற்படி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடமிருந்து பெற்றிருந்தேன்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒச்சா என்ற அமைப்புகளிடமிருந்து மேற்படி மாவட்டங்களிலிருந்து அகதிகளாக வந்தோர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டோர் தொடர்பான புள்ளி விபரங்களை பெற்றேன்.
நான் இரு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட புள்ளி விபரங்களை வைத்தே இறுதிக்கட்ட யுத்தத்தில் இத்தனை பேர் காணாமற் போயுள்ளதாகத் தெரிவித்தேன்.
இதே விடயத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது குறிப்பிட்டதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment