
புங்குடுதீவின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் "புங்குடுதீவு மான்மியம்" என்னும் நூல் அரிய நூல் கனடாவில் வெளியிடப்பட்டுள்ளது. ![]() |
யாழ்ப்பாண குடாநாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றாக இருந்து தற்போது பாலம் ஒன்றினால் இணைக்கப்பட்டுள்ள புங்குடுதீவு கிராமம் உலகெங்கிலும் புகழ் பரப்பும் ஒரு ஊராக தற்போது பிரகாசிக்கின்றது. அதற்கு காரணங்கள் பலவுள்ளன. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான வர்த்தகப் பெருமக்கள் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வர்த்தக நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது கிராமத்திற்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தார்கள்.
|
வர்த்தக துறையில் பெற்ற வளர்ச்சியினால் தென்னிலங்கையில் கூட மிகுந்த அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக வளர்;ச்சியடைந்து பல சிங்கள ஊர்களிலும் இந்து ஆலயங்களை நிர்மானித்து அதன் மூலம் தமிழையும் இந்து சமயத்தையும வளர்ப்பதில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டார்கள்.
காலங்கள் நகர நகர அந்த ஊர் மக்கள் கல்வியிலும் மிகுந்த கவனம் செலுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அறிவிலும் செல்வத்திலும் பலம் பெற்றவர்களாக வளர்ந்தார்கள். தற்போது புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பர்கள் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டிப்பறக்கின்றார்கள்.
இவ்வாறான சிறப்புக்கள் கொண்ட புங்குடுதீவு கிராமத்தின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் வகையிலும் அதற்கு காரணமாக இருந்த வர்த்தகப் பிரமுகர்கள், பெரியோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலைஞர்கள் எழுத்தாளர் ஆகியோர் தொடர்பாகவும், புங்குடுதீவின் மண்வளம் மற்றும்; பொருள்வளம் பற்றிய தகவல்கள் எல்லாம் அடங்கிய "புங்குடுதீவு மான்மியம் என்னும் 800 பக்கங்கள் கொண்ட அரிய நூல் ஒன்று அண்மையில் கனடாவில் வெளியிடப்பட்டது. மேற்படி நூலின் அறிமுக விழாக்கள் அடுத்தடுத்த வாரங்களில் புங்குடுதீவு அன்பர்கள் வாழ்ந்து வரும் ஏனைய நாடுகளான இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன என்ற நற்செய்தியும் புங்குடுதீவின் மக்கள் மகிழ்ச்சியடையும் ஒரு செய்தியாகும்.
மேற்படி நூலை வெளியிடும் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடனும் சிரத்தையுடனும் ஈடுபட்ட கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களில் சங்கத்தின் தலைவர் திருஃ திருநாவுக்கரசு கருணாகரன் மற்றும் செயலாளர் திரு துரை ரவீந்திரன் ஆகியோரை கனடாவில் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்கின்றார்கள்.
கடந்த வாரம் ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்த்தானத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் மேற்படி இரண்டு பிரமுகர்களையும் புங்குடுதீவு மக்கள் சார்பாக பாராட்டும் ஏற்பாட்டை திருவாளர்கள் மகாத்மன் மற்றும் குணா செல்லையா ஆகியோர் செய்திருந்தனர். புங்குடுதீவு காட்டுப்புலம் ஸ்ரீ அரசடி ஆதிவைரவர் ஆலயக் கட்டிட நிதிக்காக நடத்தப்பட்ட "பௌணர்மி இராகங்கள்" நிகழ்ச்சியின் போது புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திருஃ திருநாவுக்கரசு கருணாகரன் மற்றும் செயலாளர் திரு துரை ரவீந்திரன் ஆகியோர் கௌரக்கப்பட்டனர். மேற்படி விழாவில் தாயத்தின் பிரபல நாதஸ்வரக் கலைஞர் வி.கே. பிச்சமூர்த்தி, மற்றும் இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மேற்படி கௌரவிப்பு வைபவம் இடம்பெற்றது.
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், தலைவர் திருஃ திருநாவுக்கரசு கருணாகரனையும் செயலாளர் திரு துரை ரவீந்திரனை கனடா ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு பரமேஸ்வரன் ஆகியோர் கௌரவித்தனர்.
![]() ![]() |
No comments:
Post a Comment