வென்றார் சந்திரசிறி! தோற்றார் இமெல்டா! இதுவே தமிழர் நிலை!!!
யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ள அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான சுந்தரம் அருமை நாயகம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரு இடமாற்றங்களும் உடனடி அமுலுக்கு வருவதாகப் பொது நிர்வாக அமைச்சு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியா அரச அதிபராகக் கடமையாற்றிய பி.எஸ்.எம்.சாள்ஸ் மட்டக்களப்புக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு இவரது இடத்துக்கு புதிதாக சிங்கள அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் அரச அதிபரான இமெல்டா சுகுமாருக்குமிடையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திப்பதில் நிலவிய முரண்பாடே இந்த இடமாற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். குடாவுக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் இமெல்டா சுகுமாரைச் சந்தித்துச் செல்வதனை வடமாகாண ஆளுனர் விரும்பவில்லை. யாழ் வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தன்னை மட்டுமே சந்திக்க வேண்டும் என ஆளுனர் வலியுறுத்தி வந்தார். இந்த நிலையிலேயே இவ்வாறான திடீர் இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment