Translate

Tuesday 8 May 2012

துணுக்காய் மக்களுக்கு லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் உதவி


துணுக்காய் மக்களுக்கு  லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் உதவி
துணுக்காய் பிரதேசத்தில்  உயிலங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் குடிபுகுந்த மக்களுக்கு இன்று பொங்கல் அன்பளிப்புக்களை லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் வழங்கியது.
 இராணுவத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களை படம்பிடித்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
உயிலங்குளம் பகுதியில் காடுகளை அழித்து சுமார் 50 வீடுகள் இந்திய வீட்டுத்திட்டத்திற்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இந்த வீடுகளில் நிர்மாணப்பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இந்த வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும் இந்த வீடுகளை சம்பிரதாய பூர்வமான குடிபுகுதலை செய்துள்ளனர்.
துணுக்காய் பிரதேசசபை தலைவர் இராசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பாண்டியன்குளம் பிரதேசசபை உப தலைவர் செந்தூரன் கட்சி உறுப்பினர்கள் கிராமசேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சம்பிரதாய குடிபுகுதலுக்கான தலா 1500ரூபா பொங்கல் பொருட்களை ஐம்பது குடும்பங்களுக்கு இலண்டன் கற்பக விநாயகர் தர்மகர்த்தா கோபாலகிருஸ்ணனின் அனுசரணையோடு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வழங்கி வைத்தார்.
பெருங்காட்டுப் பகுதியை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்திற்கான வீதி அமைப்பு முன்பள்ளிகள் சுகாதார வசதிகள் எதுவுமே அடிப்படையில் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. சாதாரணமாக குடிநீர் வசதிகள் கூட ஏற்படுத்தாத நிலையில் அந்த மக்களுக்கான வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் குறை நிறைகளை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் துணுக்காய் பிரதேச சபையின் ஊடாக உடனடியாக குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.
இதனை விடவும் அவர்களின் மேலதிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதன்கான சம்பந்தப்படுத்தப்பட்ட மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து மேலதிக நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்வதாகக் கூறினார்.
இதேவேளை இராணுவத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களை படம்பிடித்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment