யாழ்ப்பாண மே நாள் பேரணியில் விடுதலைப் புலிகளின் கொடி கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் சிங்கள இனத்தைக் கேலி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை முற்றாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திடம் கூறியது.
இப்போது விடுதலைப் புலிகள் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கமே அறிவித்தது.
போரின் பின்னர் ஆயிரக்கணக்கான புலிகள் கைது செய்யப்பட்டனர்.
இப்போது சிறிலங்கா அரசாங்கம் வேறு எதையோ சொல்கிறது.
இது சிங்கள இனத்தைக் கேலி செய்யும் செயல்.
பேரணியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் இருப்பவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பணியகத்தில் இருந்து வெளியே வந்து, பேரணி அந்த வீதியால் சென்று கொண்டிருந்த போது புலிக்கொடியைக் காண்பித்தபடியே சென்றிருக்கிறார்.
இது சிறிலங்கா அரசினாலும் சிறிலங்காப் படையினராலும் அரங்கேற்றப்பட்ட அவசியமற்றதொரு நாடகம்.
சிறிலங்கா இராணுவம் இதனை ஒளிப்பதிவு செய்துள்ளது.
சிறிலங்கா காவல்துறை குறிப்பிட்ட சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
வடக்கிலுள்ள பொதுமக்கள் எவரும் புலிக்கொடியை வைத்திருக்கவோ கொண்டு செல்லவோ இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment