Translate

Thursday, 1 September 2011

தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது - அரிமாவளவன்

எல்லைத் தமிழன் mathan.dxb@gmail.com
தோழர் அரிமாவளவனின்  உணர்ச்சி பூர்வமான பதிவு நியாயமான ஒன்று.  

வட இந்தியாவின் இந்தி பேசும் பகுதியில் உள்ள இயல்பான ஆதிக்க வெறி இதுதான்.
அவர்கல் காசுமீரிகளை மதிக்கமாட்டார்கள்.  பீகாரி,பெங்காளி
,அச்சாமி,பஞ்சாபியர் போன்ற இதற வட மாநிலத்தவரையும் மதிக்கமாட்டார்கள்.
காசுமீர்,மணிப்பூரில்  நடுவண் அரசின் துப்பாக்கிகள் இன்றும்
வெடித்துக்கொண்டிருக்கின்றன.



தமிழர்கள் வெல்லவேண்டும்.  நமது முக்கிய நதிகளை அடைத்துவிட்டார்கள். எனவே
மழை நீரை எப்படியெல்லாம் சேகரிக்க முடியும் சேமிக்க
முடியும்,நிலத்திற்குள் உட்செலுத்தவேண்டும் என சிந்தித்து
செயல்படவேண்டும்.

நமது சந்தைகளை கைப்பற்றிவிட்டார்கள்.  மொத்த வணிகம் முழுதும் தமிழர்கள்
கையில் இல்லை.உழவர்களை  ஒரு அடிமையின் நிலைக்கு கொண்டு வந்து
விட்டார்கள்.  கிராமப்புற  வணீக மையங்களை  உள்ளூர் உழவர்கள் முன் வந்து
கட்டவேண்டும்.  விடுதலையின் ஊற்றுக்கண்ணாக இது விளங்கும்.

 பேராயக்கட்சி  கொண்டு வந்த பசுமைப்புரட்சி உண்மையில் உழவர்கலின் துயரம்.
இதற்கு மாற்றாக இயற்கை வேளாண்மையை தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும்
நடைமுறைப்படுத்தவேண்டும்.

தமிழகம் இனி யாருடைய சந்தையாகவும் இருக்க அனுமதிக்கக்கூடாது.
முடியுமா?  தமிழின உணர்வு கொண்டால் முடியும். அமைதியான முறையில் ஆதிக்க
வேர்களை அறுத்தெறிய முடியும்.
அன்புடன்
அரசு

No comments:

Post a Comment