Translate

Friday 5 October 2012

காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?


சிறிலங்காவில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னர் இதற்கான விளக்கத்தைச் சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஜெனீவாவிலுள்ள சிறிலங்கா பிரதிநிதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து சிறிலங்காவுக்கு விஜயம் செய்த மனித உரிமைப் பேரவை உறுப்பினர்களும் அரசின் கவனத்துக் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் சிறிலங்கா அரசு இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தொடர்ச்சியான மௌனத்தையே கடைப்பிடிப்பதாகவும் நவநீதன் பிள்ளை சிறிலங்கா அரசைச் சாடியுள்ளார்.

No comments:

Post a Comment