நெஹ்ரு தீவகளில் புகலிடம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவுன் தெரிவித்துள்ளார்.
நெஹ்ரு தீவுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டிருந்த 15 ஈரான் ஈராக் புகலிடக் கோரிக்கையாளர்கள் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கலகம் காரணமாக நெஹ்ரு புகலிட முகாம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான வன்முறைகள் மற்றும் குழப்பங்களினால் நெஹ்ருவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்கும் செயன்முறை ஸ்தம்பிதமடையாது என குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலகத்தில் ஈடுபட்ட மூன்று பேரை நெஹ்ரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெஹ்ரு முகாம்களில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விருப்பமில்லாத சிலர் நெஹ்ரு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதனால் இவ்வாறான
வன்முறைகள் கலகங்கள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கலகத்தில் ஈடுபடுவோரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவங்களினால் அவர்களது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதனை ஒரு சிறு சம்பவமாக கருதப்பட வேண்டும் எனவும், சொத்துக்களுக்கு
சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முகாம் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment