Translate

Tuesday 2 October 2012

பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிப்பு


மாகாணசபைத் தேர்தலின் பின்னான ஆக்கிரமிப்பு படலம் ஆரம்பம்:
பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிப்பு –
பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொட்டுக்கல் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மையவாடியில் படையினருக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசம் எனப் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளதுடன், எல்லைக்கான வேலியும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து ஒருமாதம் கடந்த நிலையில் முஸ்லிம் மையவாடி ஆக்கிரமிப்பு படையினரால் பொத்துவிலிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சதிகாரர்களின் கபட நாடகத்தால் பொத்துவில் பிரதேசம் அரசியல் அநாதையாகவுள்ள இந்த நிலையில், நமது மண்ணை நாம் காப்பாற்றவுள்ளோம் எனப் பொத்துவில் பிரதேச சபையின் புதிய மாடிக்கட்டடத்துக்கு கடந்த 29ஆம் திகதி அடிக்கல் நட்டுவிட்டு உரையாற்றும்போது உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். 
இந்த நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையும் பொத்துவில் நிலைமையைப் பற்றி குரல் கொடுத்து முஸ்லிம் மையவாடியை மீட்டுத் தர வேண்டும். என தெரிவித்துள்ளார்.           
 

No comments:

Post a Comment