(17).jpg)
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சட்டத்துக்கு விரோதமாக தொடர்ச்சியாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவரை உடனடியாக விடுவிக்கும்படி உயர்நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்தது.
திகன பிரதேசத்தைச் சேர்ந்த தங்கராசா ரமேஷ்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பாகவே இந்த கட்டளையை மூவர் கொண்ட நீதியரசர் குழுமம் பிறப்பித்தது.
சந்தேகநபர் மத்திய மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கண்டி மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 15000 ரூபா தண்டமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர், தண்டப்பணத்தை அன்றே செலுத்திவிட்டார். ஆவசரகால சட்டத்தில் விதிக்கப்பட்ட 30 நாள் எல்லையை தவிர்ப்பதற்காக இவர் மீது வேறு வழக்குகள் சோடிக்கப்பட்டன. இதனால், இவர் தொடர்ந்து சிறையில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.
மனுதாரர், மனுவில் சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டதனால் மன வேதைனையும் அவமானமும் அடைந்தார் எனவும் சம பாதுகாப்புக்கான அவரது உரிமை மறுக்கப்பட்டுள்ளது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment