Translate

Wednesday, 3 October 2012

முருகன் கோயில் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்: தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி விகாரை அமைக்கும் சூழ்ச்சியா? தாண்டியடி ஆலய நிர்வாகத்தினர்

முருகன் கோயில் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்: தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி விகாரை அமைக்கும் சூழ்ச்சியா? தாண்டியடி ஆலய நிர்வாகத்தினர்

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் விகாரை அமைக்கும் நடவடிக்கைக்காகவா திருக்கோவில், தாண்டியடி, சங்கமன்கண்டிமலை முருகன் ஆலய நிர்மாணப் பணிகள் நடைபெற்று முடிவுறும் நேரத்தில் நிர்மாணப் பணிகளை தொல் பொருள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது என்று ஆலய நிர்வாகத்தினர்  கேள்வி எழுப்பியுள்ளனர்.


இது தொடர்பாக இந்து கலாசார திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பல நூற்றாண்டுகளாக கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் தங்கித் தரிசித்துச் செல்லும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இந்த ஆலயத்தின் புனரமைப்பு வேலைகள் பூர்த்தி செய்து முடிவுறும் வேளை தொடர்ந்து வேலைகள் செய்யக் கூடாது என்று தொல்பொருள் திணைக்களத்தினர் திடீரென வந்து உத்தரவு பிறப்பித்த செயல் கண்டிக்கத்தக்கது என்று ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.

http://onlineuthayan...201485003158702 

No comments:

Post a Comment