இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் எழுதப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்றப் பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழர்களின் மறுவாழ்வு, குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சமத்துவம், சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம்.
அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசு தனது நாட்டு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசாங்கம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது' என மன்மோகன் சிங், தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (நக்கீரன்)
http://www.tamilmirr...2-10-52-10.html

No comments:
Post a Comment