Translate

Saturday 6 October 2012

யாழ் சென்ற ஜ.நா துணைச்செயலாளர் மிகவும் இரகசியமான முறையில் பூட்டப்பட்ட அறைக்குள் ஆய்வு???


ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ் சென்ற ஜ.நா துணைச்செயலாளர் அஜய் சில்பர் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அங்கு சென்ற ஜ.நா துணைச்செயலாளர் சில்பர், யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்தும், இயல்பு வாழ்வு குறித்தும் மிகவும் இரகசியமான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை ஒன்பது மணியளவில் யாழ்.வந்த அஜய் சில்பர் தலைமையிலான குழுவினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பணிமனையில் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடினர்.
இந்தச்சந்திப்பு மிகவும் இரகசியமான முறையில் பூட்டப்பட்ட அறைக்குள் இடம்பெற்றது. மேலும் இந்தச் சந்திப்பு தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த சந்திப்பை தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தில் மீள்குடியேற்றம், மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பண்டத்தரிப்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு விட்டு துணைச்செயலாளர் கொழும்பிற்குத் திரும்பியுள்ளார்.
இதேவேளை இந்தச் சந்திப்பில் ஜ.நா வதிவிடப்பிரதிநிதி சுபைனோ நண்டியும் கலந்து கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment