Translate

Saturday 6 October 2012

இராணுவம் ப.நடேசனைச் சுட்டது ! எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி !


இராணுவம் ப.நடேசனைச் சுட்டது ! எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி !


"நாம் கொல்லப்படும்போது உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது" என்ற தொணிப் பொருளில் எழுதப்பட்ட புத்தகம் நேற்று(05) வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொள்ள நோர்வேயில் இருந்து லண்டன் வந்த நோர்வே நாட்டு அமைச்சரும், இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கைமை, அதிர்வின் நிருபர் இடைமறித்து கேள்விகளைக் கேட்டுள்ளார். மேடையில் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு, கருத்தரங்கு முடிவடைந்ததும், வெளியில் வந்த எரிக் சொல்கைமிடம் அதிர்வின் நிருபர் புலித்தேவன் மற்றும் நடேசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த எரிக், இலங்கை இராணுவமே புலித்தேவன் மற்றும் நடேசனைக் கொன்றது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ! இதனூடாக கோத்தபாய மற்றும் இலங்கை அரசின் கூற்றை எரிக் சொல்கைம், முற்றாக மறுத்துள்ளதோடு, இலங்கை இராணுவத்தை அவர் நேரடியாகச் சாடியுள்ளார். 


கேள்வி 1 :- மேடையில் நீங்கள் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொன்றார்கள் என்று பல தடவை கூறியிருந்தீர்கள், இதில் உங்கள் கரிசனை தெரிகிறது. ஆனால் இலங்கையில் புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த கெளசலியன் பின்னர் சு.ப.தமிழ்ச் செல்வன் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு உங்கள் கரிசனை எங்கே போனாது ?

எரிக்கின் பதில் :- சரியாகப் பதிலளிக்கவில்லை. (காணொளியைப் பாருங்கள்)

கேள்வி 2 :- புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்படுவதற்கு முன்னர் உங்களோடு பேசினார்களா ? அன்று என்ன நடந்தது ?

எரிக்கின் பதில் :- ஆம் என்னோடு பேசினார்கள், தாம் இராணுவத்திடம் சென்று சரணடைய இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர்களை இலங்கை இராணுவமே கொன்றது என்றார்( காணொளியைப் பாருங்கள்)

BBC முன்நாள் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் அவர்கள் எழுதிய புத்தகவெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவே எரிக் லண்டன் வந்திருந்தார். இதில் ஜஸ்மின் சூக்கா(ஐ.நா அதிகாரி) BBC ஹர்ட் டோக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டிபன் சக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பிரதம விருந்தினராக சனல் 4 கொலைக்களத்தின் தயாரிப்பாளர் கொலம் மக்ரே அவர்களும் கலந்துகொண்டார். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியில் இந் நிகழ்வு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment