தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்ததாகவும், சில பிரச்சினைகளை இனங்காண்பதற்கும், சாத்தியமான தெரிவுகளைத் தேடுவதற்கு உதவியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மனிதஉரிமைகள் கற்கைகளுக்கான நிலையத்தில் கல்வியாளர்கள், இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மையில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 27 வீதமான மக்களே அங்கு சிங்களவர்களாக இருந்த போதிலும், அங்கு ஆளும் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
போருக்குப் பிந்திய அபிவிருத்தி, மீள்குடியமர்வு, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, முன்னைய மோதல் பிரதேசத்தில் படைக்குறைப்பு, அவசரகாலச்சட்ட விதிமுறைகளின் தளர்வு ஆகியன குறித்தும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அங்கு விளக்கமளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்ததாகவும், சில பிரச்சினைகளை இனங்காண்பதற்கும், சாத்தியமான தெரிவுகளைத் தேடுவதற்கு உதவியதாகவும் குறிப்பிட்ட அவர், எனினும் தொடர்ந்தும் அந்தப் பேச்சுக்களை நடத்தப்படாததற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக அங்கு சனத்தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாகவும், அதனால் தான் தேர்தலை அங்கு இன்னமும் நடத்த முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ள பீரிஸ், தற்போது அந்தப் பணிகள் நிறைவுக் கட்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
http://www.puthinapp...?20121005107089

No comments:
Post a Comment