Translate

Friday, 5 October 2012

மூதூர் தன்னார்வ தொண்டர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ACF


மூதூர் தன்னார்வ தொண்டர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ACF
மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரான்ஸின் ஏ.சீ.எப் தொண்டு நிறுவனம் மீண்டும் கே;hரிக்கை விடுத்துள்ளது.
2006ம் ஆண்டில் மூதூரில் எக்சன் ஏகேன்ஸ்ட் அங்கர் என்னும் அமைப்பைச் சேர்ந்த 17 தன்னார்வ தொண்டர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றசெயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய ரீதியில் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் சுயாதீனத் தன்மையுடையதல்ல, விசாரணைகளுக்கு பல்வேறு தடைகளும், அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டர் படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், விசாரணைகளை வலியுறுத்தும் நோக்கில் பொதுமக்களின் பங்களிப்புடன் மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட உள்ளதாக ஏ.சீ.எப் நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment