Translate

Friday, 5 October 2012

தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்

தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்
கொழும்பு: "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர்  பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக்  கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். 


இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின்  தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில்  நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும்  ஆர்வமாகவே உள்ளோம். 

இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை  இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது.

இந்தியாவில் சுமார் 800 இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது பயிற்சி பெற்று  வருகின்றனர்.அதேபோன்று இந்திய ராணுவ வீரர்களும் இலங்கையில் குறிப்பிட்ட சில  தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.எமக்கும் இந்தியாவுக்கும்,  இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது.

ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு ௭திரான சில குரல்கள் ஒலிக்கின்றன.இது குறித்து  நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான்  தமிழகம்.இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய  பிரதேசம் சவாலாக அமையாது.

தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம்.வரும் டிசம்பர் மாதத்தில்  இலங்கை சிறப்பு படையணியை சார்ந்த 45 உயரதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா  செல்லவுள்ளனர்.முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்றார்.

No comments:

Post a Comment