Translate

Wednesday, 3 October 2012

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் செய்தி

இதனால் சக நடிகைகளுக்கு அவர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கும் மேசேஜ் இதுதான். "நடிக்கும் போது உடலை பேணுங்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். சம்பாதிக்கிற பணத்தை கொஞ்சமாகவேனும் சேர்த்து வையுங்கள். நடிகர் சங்கம் இருக்கிறதுஉடன் நடித்தவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் நம்பாதீர்கள். நம்பினால் உங்கள் மரணம் கூட மதிப்பில்லாமல் போகும். சினிமாவில் பணம் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள்" என்பதுதான்.

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும்  செய்தி

நடிகைகளுக்கு அஸ்வினி சொல்லியிருக்கும் செய்தி

பொண்ணாட்டி தேவை படத்தின் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி. பேரழகி இல்லாவிட்டாலும் குடும்ப பாங்கான கேரக்டருக்கு அச்சு அசலாக பொருந்தக் கூடியவர். ஆனாலும் அவரால் பெரிய இடத்துக்கு வரமுடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். உடல் சற்று பருமனாகிவிட்ட நிலையில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில்தான் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு போதிய பணம் இன்றி அவர் மகன் படித்த கல்லூரி மாணவர்கள் பணம் திரட்டி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். தன் முதல் நாயகியின் சிகிச்சைக்கு தன் மகன் கேட்டுக் கொண்டதால் பார்த்திபன் கொடுத்து உதவிய தொகை வெறும் பத்தாயிரம் ரூபாய். ஆனாலும் இறுதியில் மரணம் அவரை தழுவிக் கொண்டது.

மரணம் அடைந்த அஸ்வினியின் உடலை ஆந்திராவில் உள்ள அவரது கிராமத்துக்கு அனுப்பி வைக்ககூட பணம் இல்லாத சூழலில் அதற்கும் மகனின் நண்பர்கள்தான் உதவியிருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் மகனின் படிப்பு செலவை பார்த்திபன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும்தான் அஸ்வினியின் ஆத்மாவுக்கு கிடைத்துள்ள ஒரே ஆறுதல் செய்தி.

இதனால் சக நடிகைகளுக்கு அவர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கும் மேசேஜ் இதுதான். "நடிக்கும் போது உடலை பேணுங்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். சம்பாதிக்கிற பணத்தை கொஞ்சமாகவேனும் சேர்த்து வையுங்கள். நடிகர் சங்கம் இருக்கிறதுஉடன் நடித்தவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் நம்பாதீர்கள். நம்பினால் உங்கள் மரணம் கூட மதிப்பில்லாமல் போகும். சினிமாவில் பணம் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள்" என்பதுதான்.

No comments:

Post a Comment