Translate

Tuesday, 2 October 2012

டெசோ தீர்மானம் ஐ.நாவில் இலங்கைக்கு அவமானம்; தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் டில்லியை விட தமிழ் நாட்டுக்கு சக்தி அதிகம் என்கிறார் கிரியயல்ல எம்.பி

டெசோ தீர்மானம் ஐ.நாவில் இலங்கைக்கு அவமானம்; தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் டில்லியை விட தமிழ் நாட்டுக்கு சக்தி அதிகம் என்கிறார் கிரியயல்ல எம்.பி
news
 டெசோ தீர்மானங்கள் ஐ.நா.சபையில் கையளிக்கப்படுவது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயமாகும். தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுடன் அரசு இராஜதந்திர ரீதியிலான நட்புறவுகளை முன்னெடுக்காமையே இந்திய இலங்கை உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.

 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
இந்திய மத்திய அரசுடனான நட்புறவை அதிகளவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுடன் வலுப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். ஐ.தே.க. வின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறு நட்புறவுகள் வலுப்படுத்தப்பட்டன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு  தமிழ்நாட்டுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. 
 
அது மட்டுமல்லாது இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் டில்லியை விட தீர்மானம்  எடுக்கும் சக்தி தமிழ் நாட்டுக்கு உள்ளது. இதுவரை காலமும் அரசின் எந்தவொரு பிரதிநிதியும் தமிழ்நாட்டுக்குச் சென்று அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்து உத்தியோகபூர்வமான பேச்சுக்களை நடத்தியதில்லை. 
 
இது இலங்கையின் இராஜதந்திர அரசியலில் பெரிய இடைவெளியாகும். அரசு  தமது ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஹக்கீம், சம்பிக்க, விமல் வீரவன்ச ஆகியோரின் பேச்சுக்களை கேட்டு தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இந்திய மத்திய அரசும் தமது ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் பேச்சைக் கேட்பதென்பது நியாயமாகும் என்றார்.

No comments:

Post a Comment