Translate

Tuesday 2 October 2012

கிழக்கில் தமிழ் முஸ்லிம் கூட்டாட்சி ஏற்படாமை குறித்து முரண்பாடு வேண்டாம்; மனோ அறிவுரை

news
கிழக்கில் தமிழ் முஸ்லிம் கூட்டாட்சி ஏற்படாதது ஏமாற்றம்தான். எனினும் அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து தமிழர்களும், முஸ்லிம்களும் முரண்படக்கூடாது. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.


இந்த முரண்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதன் அடையாளமாக, 13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் வெட்டி குறைப்பதகோ, மீளப்பெறுவதற்கோ மத்திய அரசு செய்யும் எந்த ஒரு கபட முயற்சிக்கும் கொள்கை அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட கூடாது. எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது:
கிழக்கில் அரசுக்கு ஆதரவு அளித்தாலும் 13ம் திருத்தம் என்பதற்கு மேலே செல்ல வேண்டுமே தவிர கீழே போக முடியாது என்ற அதிகாரப்பரவலாக்ககல் கொள்கையை தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடைபிடிக்கிறது என நான் நம்புகிறேன் .

13ம் திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் சட்டத்தில் உள்ளன. காணி, போலிஸ் ஆகிய விடயங்கள் இவற்றில் முதலிடங்களை வகிக்கின்றன. இந்த விடயங்களை 13ம் திருத்தத்திலிருந்து அகற்றிவிட அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருவதற்கு முயற்சி எடுப்பது எமக்கு தெரியும்.
வட மாகாணசபை தேர்தல் நடைபெற்று அங்கு புதிய மாகாணசபை உருவாவதற்கு முன்னர் இந்த நோக்கங்களை நிறைவேற்ற இவர்கள் முயலுகிறார்கள். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய 19வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படுமானால்இ அதை முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை அடிப்படையில் எதிர்க்க வேண்டும்.

அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வந்து 13ம் திருத்தத்தை அகற்றினால் அது சர்வதேச மட்டத்தில் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதனால் அந்த பெரிய வேலைக்கு உடனடியாக செல்வதற்கு முன்னர் அரசாங்கம் கபடத்தனமான சில வேலைகளை செய்கிறது. 13ம் திருத்தம் அப்படியே இருக்கஇ மாகாணசபை அதிகாரங்களில் தலையிடும் பல்வேறு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் அரசு சமர்பிக்கின்றது.

அதனால்தான்இ மாகாணசபை அதிகாரங்களில் இந்த சட்டமூலங்கள் தலையிடுமானால் அவற்றை அனைத்து மாகாணசபைகளிலும் சமர்பித்து ஒப்புதல் பெறும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த அடிப்படையிலேயேஇ தற்போது திவிநேகும சட்டமூலம்இ கிழக்கு உட்பட அனைத்து மாகாணசபைகளுக்கும் சமர்பிக்கப்பட உள்ளது.

தேசிய அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்களுக்கும் நியாயமான பங்கு இருக்கவேண்டும் என்பது மிகவும் நியாயமான நிலைப்பாடு ஆகும். அரசியல் தீர்வு என்பது அதிகார பரவலாக்கலை அடிப்படையாக கொண்டது.

எனவே முஸ்லிம் மக்களுக்கும் அரசியல் தீர்வை கோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், திவிநேகும உட்பட, மாகாணசபைகளின் அதிகாரங்களை வெட்டி குறைக்கும் எந்த ஒரு சட்டமூலங்களுக்கும் மாகாணசபையில் ஆதரவு அளிக்க கூடாது. இந்த கொள்கைரீதியான நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். எனறார்.

No comments:

Post a Comment