
இலங்கையில் யுத்தம் ஏற்பட வழிவகுத்த பிரச்சினை தொடர்பில் உடனடி அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமேன ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 67வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையின் நிலை குறித்து இலங்கை பிரதிநிதிகள் பான் கீ மூனுக்கு விளக்கமளித்துள்ளனர். பிரச்சினைகளுக்கு கால தாமதமின்றி அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென பான் கீ மூன் கூறியுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment