Translate

Friday 5 October 2012

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்

By General
2012-10-05 09:21:27
வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள்
நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ௭னக் காட்டுவதற்கே மெனிக்பாம் முகா மி லி ருந்த தமிழர்களைப் பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் காடுகளுக்குள் தள்ளிவிட் டுள்ளார். இதனூடாக இடம்பெயர்ந்தோரை மீள்கு டியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத் தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றி யுள் ளது. இதனை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


முல்லைத்தீவு கேப்பாபிலவு – சூரியபுரம் காட்டுப் பகுதிக்குள் நிர்க்கதியாக்கப்பட்ட தமி ழர்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு அமை ச் சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ இலங்கையில் இடம்பெய ர்ந்தோர் ௭வ ருமில்லை ௭னத் தெரிவித்துள்ளமை தொ டர்பாகக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்மக்கள், வலி.வடக்குப் பிரதேச த்தில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் இரு ந்து கட ந்த 25 வருடங்களாக இடம் பெயர்ந்து முகா ம்களிலும் உறவினர், நண்ப ர்கள் வீடு களிலும் தங்கியுள்ளனர். இம் மக்கள் தங்கி யுள்ள முகாம்கள் தனியா ருடைய காணிகளி லுள்ளன.

இந்த காணி களை விட்டு வெளி யேறுமாறு காணி உரி மை யாளர்கள் உத்தரவு பிறப்பித்து ள்ளனர். இத்தகைய நிலையில் இடம்பெயர் ந் தோருக்கு செல்வதற்கு இடமில்லை. ஏறக் குறைய 47 ஆயிரம் மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு தத்தமது பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகி ன்றன. இம் மக்களில் பலர் இந்தியாவில் இரு க்கிறார்கள். இவர்கள் தமது இடங்க ளிலிருந்து இராணுவம் வெளியேறினால் தம் மால் மீளக்குடியமர முடியும் ௭னத் தெரி வித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூ ரி லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ம க் கள் முகாம்களில் இருக்கின்றனர். இவர் கள் கடந்த 6 வருடங்களாகச் சொந்தக் காணி களுக்குச் செல்லமுடியாத நிலையில் இரா ணு வம் காணிகளை ஆக்கிரமித்துள்ளது. முல்லைத்தீவில் தற்போது கேப்பாபிலவு மக்களைக் காட்டுக்குள் வைத்திருக்கி ன் ற னர். இம் மக்களது குடியிருப்புக் காணி கள், வயல் காணிகள் ௭ன ௭ல்லாவற்றையும் இர ா ணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வை த் துள்ளது. அதுபோல் கிளிநொச்சி நகரிலும் பரவிப் பாஞ்சான் கிராமம் முழுமையாக இராணு வப் பிரிகேட் பிரிவுக்காக அபகரிக்கப்பட் டுள் ளது. இங்குள்ள காணி நிலம், வீடுகளை மக்களிடம் ஒப்படைக்காது தமது கட்டுப்பா ட்டு க்குள் இராணுவத்தினர் வைத்திருக்கி ன்றனர்.

இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழ க்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந் தோர் சொந்த இடங்களிற்குத் திரும்பிச் செல்ல முடியாதநிலையில் இராணுவத்தினர் பொது மக்களுடைய காணிகள், நிலங்கள் வீடு களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இது இப்படியிருக்க, பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மக் களை மீளக்குடியமர்த்திவிட்டோம் ௭னக் கூறுவது பொய்யாகும். பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் உலகத்திற்கு சொல் லும் இவ்விடயம் உலக நாடுகளை பிழை யான பாதையில் கொண்டு செல்லும் முய ற்சியாகும். மெனிக்பாமை மூடி இதனை காண்பிக்க முயற்சிக்கின்றார்.

ஆனால் ௭மது மக்கள் இன்னமும் முகாம்களிலும் இராணு வத்தினரின் ஆக்கிரமிப்புக்குள்ளும்தான் இரு க் கின்றார்கள். இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவம் குறைக்கப்பட்டு விட் டது. இன்னும் 15 ஆயிரம் இராணுவத்தினர் தான் இங்கு இருக்கிறார்கள் ௭னக் கூற ப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு அமை ச்சின் தகவலுக்கமைய இலங்கையில் 2 இலட்சம் இராணுவத்தினர் இருக்கி ன்றனர். இந்த இரண்டு இலட்சத்தில் வடக்கு மாகா ண த்தில் மாத்திரம் 15 டிவிசன்கள் இருக் கின்றன. ஒரு டிவிசனில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் இராணுவம் இருக்கின்றனர். ஆக 15 டிவிசன்களிலும் 1 இலட்சத்து 50 ஆயி ரம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இதைவிட கிழக்கு மாகாணத்தில் இரண்டு டிவிசன்கள் உள்ளன. ஆகையால் அங்கே இரு பதாயிரம் இராணுவத்தினர் இருக்கி ன்றனர். ௭னவே வடக்கிலும் கிழக்கிலும் 1 இல ட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

ஏனைய பகுதியில் 3 டிவிசன்கள்தான் இருக்கின்றன. இதற் கமைய வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண் டிருக்க தென் பகுதியில் 30 ஆயிரம் இராணு வத்தினர் மட்டுமே இருக்கின்றனர். இதுதான் உண்மையான புள்ளி விபரம். இதனை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல் லை த்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட ங்களுக்கு போவோரால் பார்க்கமுடியும். அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கூறியதால் இராணு வத் தைக் குறைத்து விட்டோம், இராணுவம் இல் லையென கூறுவது பொய்யாகும்.

இரா ணுவத்தினருக்கு வேலையில்லாததால் புலனாய்வுப் பிரிவுக்குள் இவர்களை இறக்கி விட்டுள்ளனர். இந்த புலனாய் வாளர்களுக்கு தாம் ௭ன்ன செய்யவேண்டும் ௭னத்தெரியாது. இதனால் புத்தக வெளியீடு, திருமண நிகழ்வு, இறந்த வீடு, பிறந்தநாள் நிகழ் வுகள் போன்றவற்றிற்கும் புலனாய்வா ளர்கள் போகிறார்கள். வீதியில் பத்துப் பேர் கூடினாலும் புலனாய்வுப் பிரிவினர் போய் நிற்கின்றார்கள். ஆகவே இங்கு சாதாரண சூழல் ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். இதை த்தான் இராணுவம் இங்கு செய்து வைத் துள்ளது. இதனைச் செய்து விட்டு யாழ்ப் பாணத்தில் சாதாரண நிலை வந்து விட்டது. மக்களைச்சென்று பார்க்கலாம். ஜனநாயகச் சூழல் வந்து விட்டது ௭ன்று கூறுவது சுத்தப் பொய் யான உலகத்தை ஏமாற்றும் கருத் தாகும். ஆகவே சுமுகமான சூழல் இங்கு இல்லை ௭ன்பதே ௭னது கருத்தாகும்.
http://www.virakesar...cal.php?vid=947 

No comments:

Post a Comment