மேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை
மேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை
களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று மாலை களனியிலுள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஹசித்த மடவல ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
களினி பிரதேசம் தனக்குச் சொந்தமானது என கூறிவரும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன.
இதில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கெதிராக ஹசித்த மடவல நேரடி மோதல்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அடியாள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து வேறொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Latest updates on daily current affairs Latest Tamil Newspaper
ReplyDelete