தமிழ் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் இராணுவ தலையிட்டால், சர்வதேசத்தில் முறைப்பாடுகளை செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதற்காக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல போவதாகவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இராணுவ ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட, கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிடுவதில்லை. இவ்வாறான நிலைமையில், ஜனநாயக நிர்வாகம் இருப்பதாக தெரிவிக்கும் இலங்கையில் கல்வி செயற்பாடுகளில் ஏன் இராணுவம் தலையிட வேண்டும் எனவும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்க இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சீருடையுடன் சென்று கல்வி கற்பித்து வருகின்றனர். இதற்கு வலய கல்வி பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. இராணுவத்தினரின் இந்த செயற்பாடுகள் காரணமாக மாணவர்களும், பெற்றோரும் அதிருப்தியடைந்துள்ளனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
Daily Thanthi, the Tamil News paper provides a great platform for advertisers to communicate effectively with the target audiencevisit here Tamil News Articles
ReplyDelete