கால தாமதமின்றி 13ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களின் அடிப்படையாக 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலிருந்து எடுக்கும் தீர்மானங்களை வடக்கு கிழக்கு மக்கள் மீது அரசாங்கம் திணிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் அந்தப் பிரதேச மக்கள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வீதிகள், பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் புனரிமைக்கப்படுவதனை தமிழ் மக்களின் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்;;ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சுய விருப்பின் அடிப்படையில் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உயர் இராணுவ அதிகாரி வழங்கிய செவ்வி, நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாணவர்கள் சுயாமாக சிந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் மாணவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் பிளவுபட்ட நாடு பற்றி பேசவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு என்பதனையே கோரி நிற்பதாகவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment