நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையால் இதுவரை 109672 குடும்பங்களைச் சேர்ந்த 400003 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 7 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 7 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.
மேலும் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 11144 குடும்பங்களைச் சேர்ந்த 38837 பேர் இன்னும் 245 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக வடமாகாணத்தில் இதுவரை 29305 குடும்பங்களைச் சேர்ந்த 105333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9522 குடும்பங்களைச் சேர்ந்த 33374 பேர் 195 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் வடக்கில் 106 வீடுகள் முழுமையாகவும் 12695 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 62446 குடும்பங்களைச் சேர்ந்த 231160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கில் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு ஒருவர் காணாமற் போயுள்ளனர்.
2168 வீடுகள் முழுமையாகவும் 3870 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2731 குடும்பங்களைச் சேர்ந்த 9220 பாதிக்கப்பட்டுள்ளதோடு 478 குடும்பங்களைச் சேர்ந்த1573 பேர் 23 தற்காலிக முகாம்களில் தக்க வைக்கப்பட்டுள்ளர்.
கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 13 மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 7 பேர் காணாமற் போயுள்ளனர்.
No comments:
Post a Comment