Translate

Friday 5 October 2012

இந்தியாவுக்கு எதிராக இலங்கையைப் பாக். பயன்படுத்துகின்றதா? இந்தியா விசாரணை!!


இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ இலங்கையை தளமாகப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை அடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் புதுடில்லி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்குச் செல்ல முயன்ற போது ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டமை மற்றும் இந்தியக் கடற்படையின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளின் தொடர்பாடலை இடைமறிக்கும் அவதானிப்பு நிலையம் ஒன்றை ஐ.எஸ்.ஐ யாழ்ப்பாணத்தில் நிறுவியுள்ளதாக இந்தியப் புலனாய்வுத்துறை வழங்கிய தகவல் ஆகியவற்றை அடுத்தே, இவ்விவகாரம் தொடர்பில் கொழும்புடன் புதுடில்லி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது புறித்து கியூ பிரிவும், இந்திய உள்ளக புலனாய்வு அமைப்பும் இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு இவ்விரு அமைப்புகளும் இந்திய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், இவ்விகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளதாக இவ்வூடகம் தெரிவித்துள்ளர்.

No comments:

Post a Comment