மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தின் தாக்கம் காரணமாக விசேட தேவையுள்ள சிறுவர்களாக பிறந்தவர்களை அரவணைக்கும் வகையிலான பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலண்டன் அகிலண் பவுன்டேசனின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இந்தபாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அன்பகம் பாடசாலை என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்பகம் தலைவர் டேவிட் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபர் கோபாலகிருஸ்ணன், மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் இணைத்தலைவர் சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment