அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது.
நாடு கடத்தப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் தலா ஐந்து லட்ச ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
எதிர்வரும் 3ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை, காலி, அம்பிலிபிட்டிய, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment