
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து இன சமூக மக்களையும் மீள் குடியேற்றுமாறு ஜே.என்.பி கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் N;காரியுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.என்.பி.யின் பேச்சாளர் முஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் மீளவும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
யாழ்;ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப்புலிகள் விரட்டியடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்த பலர் வேறும் இடங்களில் குடியேறியுள்ளதாக முசம்மில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்ற ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment