யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் இரண்டு நாடுகள் தோற்றம் பெற்றிருப்பதாகப் பரபரப்பு அறிவித்தலை சிறீலங்கா தேசிய மொழிகள் - சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
சிறீலங்கா நல்லிணக்க ஆணையத்தின் முன்மொழிவுகளை அமுல்படுத்துவது தொடர்பாக மக்கள் சனநாயகப் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இலங்கை இருகூறுகளாகப் பிளவுபடுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், எதிர்மாறான விளைவையே யுத்தத்தின் முடிவு கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்குப் பின்னர் தென்னிலங்கையிலிருந்து வேறுபட்ட ஆட்சி வடக்கில் நடப்பதாகவும், அங்கு சனநாயகத்தை துளியளவுக்குக்கூடக் காண முடியவில்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கில் சனநாயகக் கட்டமைப்புக்கள் இயங்கினாலும்கூட அங்கு சனநாயகம் அமுலில் இல்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக் காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment