Translate

Sunday 18 November 2012

13ஆவது திருத்தத்தை மாற்ற தெரிவுக்குழு


13ஆவது திருத்தத்தை மாற்ற தெரிவுக்குழு

மாகாணசபை முறையை இலங்கைக்கு அறிமுகம் செய்த அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டுமொருமுறை திருத்தத்துக்குட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட கையோடு அரசாங்கத்தின் இணை கட்சிகள் பல 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக குரல்களை எழுப்பின.
இந்நிலையில், அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் அரசியல் நிபுணர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படவுள்ள வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த அரசிலயமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கமைய, 13ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வெகு விரைவில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரை அரசாங்கம் கோரவுள்ளதாக மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் மாகாணசபைக்கான கொள்கை தயாரித்தல் மற்றும் மாகாணசபை விடயதானங்கள் தொடர்பான ஏற்பாடுகளைக் கொண்டிக்கின்ற 154 (உ) பிரிவை திருத்தி விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.
அதேபோன்று, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு இருக்கின்ற பொறுப்புகள் சாதாரணமானதா என கண்டறியும்.

No comments:

Post a Comment