Translate

Sunday 18 November 2012

இலங்கைக்கு எதிராகக் கை நீட்டியவர்களுடன் கைகோர்க்க வேண்டிய அவசியமில்லையாம்; விமல்


இலங்கைக்கு எதிராகக் கை நீட்டியவர்களுடன் கைகோர்க்க வேண்டிய அவசியமில்லையாம்; விமல்

37a85148f68423631c5dde7a62f55c4bஜெனீவாவில் எமக்கெதிராகக் கை உயர்த்திய நாடுகளுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என அமைச்சர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வத்தன. இப்படியான நாடுகளுடன் எமது நாடு கைகோர்த்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  நேற்றைய தினம் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிக்கையில்,
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு முன் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
வங்குரோத்து நிலையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வெளிநாட்டுத் தலையீடுகளை நாட்டுக்குள் ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதைவிட வெள்ளையர்களை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் பொருளாதாரத்திற்கான திட்டங்களை வகுத்த போன்று எமது அரசாங்கம் செயற்பட வேண்டியது இல்லை.
எனினும் பொருளாதார நோக்கு மற்றும் நிதிக் கொள்கை பற்றி விரிவாக ஆராய்ந்தே வரவு செலவுத் திட்டத்தை நாம் பார்க்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கையில் இருந்தவாறு விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
எனவே மஹிந்த சிந்தனை மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றும் வகையிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி விவாதிக்க வேண்டும்.
இருப்பினும் யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலேயே நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே நிதிக் கொள்கைகள் அமுல்படுத்துகின்றன.
அந்த அபிவிருத்தியை நோக்கி அரசாங்கம் செல்வதைப் புரிந்து கொள்ளாதே எதிர்க்கட்சிகள் அதனை விமர்ச்சித்து வருகின்றன. எனவே,இனிமேலாவது இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment