நானும் ஒரு போராளி ,இதனைப் படித்தபின் ஒன்று தெளிவாகிறது ,அதாவது எம்மைவைத்து இன்னும் நீங்களும் ,உங்களைப்போன்ற நபர்களும்
பணம் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டீர்கள் .இதுவரைகாலமும் இல்லாத இந்த யோசனை ஏன் மாவீரர் நாள் நெருங்கி வரும்போது உங்கள் மனதில்
வெளிப்படுகிறது ,இதிலிருந்தே தெரிகிறது மாவீரர் நாள் பணத்தில் உங்களுக்கும் பங்கு உண்டென்பது ,எமது விடுதலை தொடர்பாகாவோ அல்லது
எமது போராளிகளின் வாழ்வாதாரம் பற்றியோ இதுவரை சிந்திக்காத நீங்கள் எல்லாம் சிங்களத்துடன் சேர்ந்து அல்லது அது விரும்புவதை
செயல்படுத்திக்கொண்டு அறிக்கைவேறு விடுகிறீர்கள் ,எமக்கு போராட்டம் பற்றி நீங்கள் வகுப்பெடுக்கிறீர்கள் ,களமுனையை வீடியோவிலயும் ,ஆமியை
கனவிலையும் பார்த்த நீங்கள் ,கடைசிவரை தொடர்பில்லாது நின்று தலைமைக்குத் துரோகம் செய்து இயக்கப் பணத்தில் சுகபோகம் அனுபவித்து ,பலவருடங்களாகக் காணாமல் போயிருந்து இப்போ எந்த முகத்துடன் தலைகாட்டுகிறீர்கள் .உங்களால் முடிந்தால் ஒரு போராளியாய் எம்முன் வந்து
பேசுங்கள் ,மறைந்திருந்து ஊளையிடாதீர்கள். நீங்கள் நரிகள், நாங்கள் புலிகள் .
மானத் தமிழன் என்றால் ,உயிருக்கு பயந்தவர் இல்லையென்றால் ,உண்மையான புலிவீரன் என்றால் ஒருவன் முன்னால் வா பார்க்கலாம் ,
அதைவிடுத்து எமக்கு நீர் போராட்டம் நடத்திக் காட்டாதீர் .
போராளி
ரதி
No comments:
Post a Comment