அச்செய்தியில் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான புலவர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு போராளி ஒருவரை அழைத்து சிகிச்சை கொடுக்காது ஏமாற்றியதாக வெளியிடப்பட்டிருந்தது.
உண்மையில் அந்த போராளியின் பயண ஒழுங்கிற்கு புலவர் அண்ணாவின் பணிப்பின் பெயரில் தமிழ் இளையோர் நடுவம் நேரடியாக உதவியை வழங்கி இருந்தது. மேலும் இது போன்று பல போராளிகளுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் தமிழ் இளையோர் நடுவம் இன்றும் உதவிகளை வழங்கி வருகின்றது. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட போராளியை நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம் அதன் ஒலிவடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் குறிப்பிடுகையில் இப்படி அவர் எவருடனும் கதைக்கவில்லை என்றும் இது முற்றிலும் புலவர் அண்ணாவை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
உண்மையில் இந்த இணையத்தளங்களிற்கு பின்னால் சிறிலங்கா அரசாங்கம் இருந்து வருவது இச் செயற்பாடுகள் ஊடாக வெளிப்படுகின்றது.
(மேல்சிகிச்சைக்காக தமிழகம் வந்த போராளியின் உண்மை வாக்குமூலம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது)
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழ் இளையோர் நடுவம் - நோர்வே
No comments:
Post a Comment