வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை எவ்விதமான நடடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
வன்னியில் இயங்கும் சமூக உளநல மையத்தை மூடி விடுவதற்கு ஆளுனர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே சிவசக்தி ஆனந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment