தமிழ் பேசும் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் மஹிந்தோதய ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளே அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவை மூன்றும் சிங்கள பாடசாலைகளாகவே அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பொன். செல்வராசா இன்று சபையில் குற்றம்சாட்டினார்.
வடமாகாணத்தில் ஒரு பாடசாலையே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் இரு பாடசாலைகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இத்திட்டத்தில் ஒரு பாடசாலையேனும் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்ட குழு நிலையின் 2ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வராசா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment