கொழும்பு, நவ. 21 - ராஜபக்சேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் மாகாண அளவிலான தேர்வுகளை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தனது 67 வது பிறந்த நாளை கொண்டாடினார். நாடுமுழுவதும் ஒருவாரம் கொண்டாடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
திங்கட்கிழமையன்று தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளுக்கு வருகை தந்த அரசு அதிகாரிகள், அதிபரின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு உத்தரவிட்டனராம். இதை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ராஜபக்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்வதற்காகவே இவ்வாறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மாணவர்களும், பெற்றோர்களும் புகார் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment