Translate

Tuesday, 20 November 2012

இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தி.மு.க ஓயாது: டி.ஆர்.பாலு


தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. நாடாளுன்ற குழு தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகையில்,

டெசோ மாநாட்டு தீர்மான நகலை நானும், துணை செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஐ.நா.சபையில் கொடுத்துள்ளோம். இத்துடன் இதுகுறித்த வேலை இன்னும் முடியவில்லை. தி.மு.க மட்டும் தான் பொது பிரச்சினை குறித்து ஐ.நா. சபை வரை சென்றுள்ளது. 

இலங்கையின் உள்நாட்டு போரால் சுமார் 95 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். 
மேலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இலங்கை தமிழர்கள் நாடு கடந்து வாழ்ந்து வருகின்றனர். இலங்கை பிரச்சினை தொடர்பாக வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வருகிற 22-ந்தேதி தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. 

இந்த தீர்மானத்தை முதல் வாரத்தில் எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தி.மு.க ஓயாது இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment