Translate

Tuesday 20 November 2012

வெலிக்கடையில் பெயர்களை அழைத்து படுகொலை செய்த சிறப்பு அதிரடிப்படை - சிறை அதிகாரிகள் தகவல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.



கடைசிக் கைதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறைச்சாலை பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

“சனிக்கிழமை அதிகாலை 2 – 3 மணியளவில் கலவரத்தை சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அதையடுத்து கைதிகள் தமது கூண்டுகளுக்குள் சென்றனர்.

அதன்பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் பெயர்ப் பட்டியல் ஒன்றுடன் வந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்தனர்.

இவ்வாறு வெளியே அழைக்கப்பட்டவர்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.” என்றார் அந்தப் பணியாளர்.

“ஒரு கைதி காலில் வீழ்ந்து தன்னை விட்டு விடும்படி கதறினார்.

ஐயா எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்று அழுதார் அவர்” என்று சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் தமது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அச்சமான சூழல் நிலவுகிறது. இந்தச் சம்பம்பவத்தின் பின்னர் தகவல்கள் வெளியே கசிவதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தாம் பயமுறுத்தப்படுவதாக” மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.
http://www.puthinapp...?20121118107306 

No comments:

Post a Comment