Translate

Sunday 18 November 2012

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - CPI


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - CPI
 இலங்கை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்த சர்வதேச பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
சர்வதேச சமூகத்தினால் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் தமிழர் பிரதேசங்களில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தொடர்பான ராஜதந்திர கொள்கைகளில் இந்தியா மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment