இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரளுமாறு பொதுமக்களுக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழீழம் தொடர்பான தமிழர்களின் நிலைப்ப்பாட்டை கொண்டு செல்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி பெரும் எண்ணிக்கையில் மெரினாவில் திரண்டு உணர வைத்தோம்..
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வை திணிப்பார்கள் என்று கடந்த ஆண்டு மே மாதம் சொன்னதைப் போலவே தற்போது நடக்கிறது. இதை உடைக்க வேண்டும்.
ஐ.நா தீர்மானத்தை நம் மீது உலகம் திணித்து, ஏற்றுக் கொள்கிறாயா என்ற போது ஏற்கவேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற விவாதம் வந்தது. இதற்குப் பதிலாக, « தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பும், சுதந்திர சர்வதேச விசாரணயும் » தாம் எங்களுக்குத் தேவை என்று மார்ச் 18-ந் தேதி சென்னை மெரினாவில் கூடினோம். ஊடகங்கள் மக்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை கொண்டு சென்றன.
இன்று இந்த கோரிக்கைகள் தமிழகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. தற்போது மக்களிடத்தில் பொது விவாதத்திற்கு « ஐ. நா வாக்கெடுப்பு » தேவை என்பது வந்துவிட்டது. ஆனால் இது சாத்தியமாக வேண்டுமென்றால் இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பு நடந்ததாக அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சுதந்திர விசாரணை அறிவிக்கப்பட்டாக வேண்டும்.
ஐ.நாவில் தீர்மானம் வருவது மட்டுமே தீர்வை ஏற்படுத்தாது. சர்வதேச மக்கள் சமூகம் தமிழீழ விடுதலையின் நியாயத்தை அறியும் போது நமது போராட்டம் பல அடிகள் முன்னகரும்.
இதனால் நமது கோரிக்கைகள் மேலும் உரத்து கேட்க, மே 20-ந் தேதி சென்னை மெரினாவில், நீதி கேட்ட கண்ணகி சிலையினருகில், பெரும் திரளாய் ஒன்று கூடுவோம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
URL simplifié: http://www.eelanadu.info/?p=1993
No comments:
Post a Comment