
இதையடுத்து இங்கிலாந்து குடியேற்ற துறையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர், போலீஸ் உதவியுடன் அந்த பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த இந்தியர்கள் 36 பேர் சிக்கினர். அவர்கள் 23 வயது முதல் 56 வயதுடையவர்கள். அவர்களை குடி யேற்ற துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட இந்தியர்களில் ஒருவர், பண மோசடி தொடர்பாக போலீசால் தேடப்படுபவர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment